பிரியமானவர்களே,
ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள
எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன்
அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன்
அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
- (1 யோவான் 4:7-9)
.
ஹென்றி போஸ் (Henry Bosch –Editor of Our Daily Bread) நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்போது, அவர் தந்தையின் மேல் அலாதி பிரியம் வைத்திருந்தார். அவரது தந்தைக்கு கறுப்பு வால்நட் என்னும் பருப்பு மிகவும் இஷ்டம். அது அவர்கள் வீட்டில் வாங்குவது மிகவும் அரிது. ஒருநாள் அவர் வெளியில் தெருவில் ஒரு வால்நட் பருப்பை கண்டார். அதை எடுத்து வந்து தனது தாயாரிடம் கொடுத்து, உடைத்து சாப்பிட வேண்டும் என்று வீட்டிற்கு ஓடி வந்தார். அப்போது அவருக்கு தனது தந்தையின் ஞாபகம் வந்தது. அதை அப்படியே வைத்து தனது தந்தை சாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று அதை அப்படியே பத்திரமாக வைத்தார். சாயங்காலம் அவரது தகப்பனார், தூரத்தில் வரும்போதே, அவர் ஓடிப் போய் காலை கட்டிக்கொண்டு, வீடு வரை அப்படியே நடந்து வந்தார்.
ஹென்றி போஸ் (Henry Bosch –Editor of Our Daily Bread) நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்போது, அவர் தந்தையின் மேல் அலாதி பிரியம் வைத்திருந்தார். அவரது தந்தைக்கு கறுப்பு வால்நட் என்னும் பருப்பு மிகவும் இஷ்டம். அது அவர்கள் வீட்டில் வாங்குவது மிகவும் அரிது. ஒருநாள் அவர் வெளியில் தெருவில் ஒரு வால்நட் பருப்பை கண்டார். அதை எடுத்து வந்து தனது தாயாரிடம் கொடுத்து, உடைத்து சாப்பிட வேண்டும் என்று வீட்டிற்கு ஓடி வந்தார். அப்போது அவருக்கு தனது தந்தையின் ஞாபகம் வந்தது. அதை அப்படியே வைத்து தனது தந்தை சாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று அதை அப்படியே பத்திரமாக வைத்தார். சாயங்காலம் அவரது தகப்பனார், தூரத்தில் வரும்போதே, அவர் ஓடிப் போய் காலை கட்டிக்கொண்டு, வீடு வரை அப்படியே நடந்து வந்தார்.
.
இரவில்
சாப்பிட போகுமுன், அந்த வால்நட்டை எடுத்து வந்து தன் தகப்பனிடம் கொடுத்து, ‘அப்பா இந்தாருங்கள்,
இதை நான் இந்த நாள் முழுவதும் உங்களுக்கென்று வைத்திருந்தேன்’ என்று அன்புடன் கொடுத்தார்.
ஆனால் அவரது தகப்பன் அதை உடைக்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை.
.
ஆனால்
முப்பது வருடங்கள் கழித்து, அவரது தகப்பன் மரித்த பின்பு அவருடைய மேஜையில் ஒரு சிறிய
பெட்டியில் அந்த வால்நட் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார். அவரது தாயார்
‘என் மகனிடமிருந்து கிடைத்த இநத அன்பின் பரிசை நான் சாகும்வரை பத்திரமாக வைத்திருப்பேன்’
என்று தகப்பன் கூறினார் என்று கூறினார்களாம்.
.
இன்று
நாம் எந்த அளவு நமது தாயையோ, தகப்பனையோ மனைவியையோ, கணவரையோ, பிள்ளைகளையோ நேசிக்கிறோம்?
‘ ஷாஜகானைப் போல ஒரு தாஜ்மகாலை கட்டினால்தான் அன்பு அதிகம் என்று அர்த்தமில்லை. நாம்
நமது அன்பை சிறிய காரியங்களில் வெளிப்படுத்தினாலும், அது நிச்சயமாக கிரியை செய்யும்.
வெளிநாடுகளில், கணவன் தன் மனைவியை தினமும், உன்னை நேசிக்கிறேன், நீதான் எனக்கு இனியவள்
எனறு கூறுவார்களாம். அந்த அன்பு எவ்வளவு உண்மை என்று நமக்கு தெரியாது. ஆனால் அதை அவர்கள்
வெளிப்படுத்தும்போது, அந்த மனைவி சந்தோஷப்படுகிறாள். அந்த பழக்கங்கள் நமது இந்தியாவின்
கலாச்சாரத்தில் இல்லை. ஆனால் வேறு விதத்தில் கணவன் அதை வெளிப்படுத்தலாம். மனைவியும்
அப்படி வெளிப்படுத்தலாம்.
.
பெற்றோருக்கு
ஒரு பரிசை வாங்கி வந்து கொடுத்து, ஒரு கார்டில், நீங்கள் என் தகப்பனாக, தாயாக இருப்பது
எனக்கு பெருமையாக உள்ளது என்று எழுதி கொடுக்கலாம். உங்கள் கையெழுத்தினால் அதை பெற்றோர்
காணும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். உள்ளத்திலிருந்து ஆசீர்வதிப்பார்கள். பெரிய
பெரிய காரியங்கள் செய்தால்தான் என்றில்லை, சிறிய காரியங்களின் மூலம் நம் அன்பை வெளிப்படுத்த
நாம் மறக்க கூடாது.
.
அதைப்போல
நாம் தேவனை எந்த அளவு நேசிக்கிறோம்? தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான
குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன்
நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது என மேற்கண்ட வசனத்தில் பார்க்கிறோம். தேவன் நம்மேல்
வைத்த அன்பினால், தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி பாவிகளை இரட்சித்தார்.
ஆனால் அப்படி அன்பு செலுத்தின தேவனுக்கு பதிலாக நாம் என்ன செய்கிறோம்? அவர் தேவன் அவருக்கு
நான் என்ன செய்ய முடியும் என்று சொல்கிறோமா? அவர் உங்கள் பணத்தையோ, உங்கள் பொருளையோ
எதிர்பார்க்கவில்லை. அவர் எதிர்ப்பார்ப்பதெல்லாம் உங்கள் முழு இருதயத்திலிருந்து வரும்
அன்பைதான். அண்டசராசரங்களையும் படைத்த தேவன், உங்கள் அன்பை எதிர்ப்பார்க்கிறார் என்றால்
என்ன ஆச்சரியம்! ‘ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும்
உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக இது முதலாம் பிரதான கற்பனை’ என்று இயேசு கூறினாரே!
.
கர்த்தரிடத்தில்
அன்புகூருவோமா? அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? தினந்தோறும் அவருடன் ஜெபத்தில்
பேச வேண்டும். அவருடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்க வேண்டும். வேதத்தில் சொல்லியிருக்கிற
கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும். செய்வோமா? கர்த்தர் அதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்.
ஆம் ஆண்டவரே, செய்வோம் என்று சொல்வோம், செய்து காட்டுவோம்! ஆமென் அல்லேலூயா!
ஜெபம்
எங்களை
நேசிக்கிற நல்ல தகப்பனே உம்மை துதிக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதத்தில்
காண்கிறோமே, அப்படி அன்பாயிருக்கிற தேவனை நாங்களும் முழு உள்ளத்தோடு முழு ஆத்துமாவோடு
அன்புகூர கிருபை செய்யும். எங்கள் சொந்த அன்பு உறவுகளில் உண்மையான அன்பு செலுத்தி நீர்
எங்களில் வாழ்வதை அவர்களுக்கு வெளிப்படுத்த கிருபை செய்யும். இந்த மாத வாக்குதத்தத்தின்படி
எங்கள் இருளை நீர் வெளிச்சமாக்குவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு
எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment