ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம்,
நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு
விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23).
ஐந்தாவது சுளை........
தயவு:
'எனக்கு
ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என்
ஆவியைக் காப்பாற்றினது' (யோபு-10:12) என்று பார்க்கிறோம். ஆம், நம் தேவன்
நமக்கு ஜீவனைத் தந்ததோடு மாத்திரமல்ல, தயவையும் பாராட்டி இந்த புதிய நவம்பர் மாதத்தில்
காலடி எடுத்து வைக்க கிருபை பாராட்டியிருக்கிறார். அவருடைய தயவும் இரக்கமும் இல்லாதிருந்தால்
நாம் எப்படி இருந்திருப்போமா தெரியாது. ஆனால் அவர் நம் மேல் வைத்த தயவினால் இந்நாள்
வரை ஜீவனோடு சுகத்தோடு நாம் நல்ல நாட்களை காண்கிறோம்.
மற்றவர்களுக்கு
நம்மால் இயன்றதை, அவர்களிடம் திரும்பவும் உதவி பெறுவோம் என்ற கைமாறு கருதாமல் செய்யும்
உதவியே தயவு ஆகும். உதவி என்று யாரும் கேட்டு வந்தால் அநேகருக்கு முகம் வேறு மாதிரி
மாறி விடுகிறது. இந்த ஆளுக்கு வேறு வேலையில்லை, சும்மா உதவி தேவை என்று வந்து விடுகிறான்
என்று முகத்தை சுளிக்கிறோம்.
.
தயவு
பாராட்டுவதற்கு முதல் உதாரணம் நம் தேவன்தான். அவர் தயவு பாராட்டுவதால்தான் பாவிகளாயிருந்தாலும்,
நம்மை நீதிமான்களாக்கி, நம்மை பரலோக இராஜ்யத்திற்கு சுதந்தரவாளிகளாக மாற்றியிருக்கிறார்.
.
வேதத்தில்
எத்தனையோப் பேர் மற்றவர்களுக்கு தயவு பாராட்டி இருப்பதைக் காணலாம். யோசேப்பு தன்னை
அநியாயமாய் அந்நியரிடம் விற்ற தன் அண்ணன்மார்களின் மேல் கோபம் கொள்ளாமல், அவர்கள் மேல்
தயவுக்காட்டி, பஞ்சக்காலத்தில் அவர்களை ஆதரித்தார்.
.
தாவீது
இராஜா தன் உயிரை பறிக்க தன்னை துரத்தி வந்த சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தை
அரண்மனையில் தன்னோடு இருக்க வைத்து, உணவுகொடுத்து, தயவு பாராட்டினாரே. பழைய ஏற்பாட்டு
விசுவாசியானாலும், அவரிடம் ஆவியின் கனி வெளிப்பட்டதே!
.
பிரியமானவர்களே,
இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருந்தும், நாம் மற்றவர்களிடம் எப்படி தயவு காண்பிக்கிறோம்?
யார் யார் மற்றவர்களுக்கு தயவு காண்பித்தார்களோ, அவர்களுக்கும் தயவு கிடைத்தது. நாம்
மற்றவர்களுக்கு தயவு செய்தால், நம்முடைய தேவையில் நமக்கு தயவு கிடைக்கும். நம்மிடத்தில்
தயை வேண்டி வரும் உதவியற்றவர்களுக்கு நாம் உதவி செய்கிறோமா?
.
ஆப்ரிக்காவில்
உசாமுசுலு மட்வா என்னும் மனிதர், தன் சிறுவயது மகனை வயிற்றுப்போக்கினால் ஆஸ்பத்திரி
கொண்டு சென்றும், மரித்துப் போனபடியினால், மரித்த குழந்தையை ஒரு சபையின் போதகரிடம்
அடக்கம் செய்யும்படி கேட்டபோது, அந்த போதகர், அந்த மனிதர் தன் சபையின் உறுப்பினரில்லை
என்பதால் அடக்கம் செய்ய மறுத்து விட்டார்.
.
பின்னர்
அதே மனிதர் கிறிஸ்தவம் ஏன் ஆப்ரிக்காவில் தோற்றுப் போனது என்று ஒரு புத்தகத்தையும்
எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுகிற நம்மிடம் இருக்க வேண்டிய தயவு
எங்கே போயிற்று? கிறிஸ்து நம் சொந்த இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த சபையில் ஆவியானவரின்
கனி காணப்படவில்லை என்றால், அவருடைய பரிசுத்த இரத்தத்தை நாம் எந்த அளவு மதிக்கிறோம்
என்பது விளங்குமல்லவா?
.
கர்த்தரை
ஏற்றுக் கொண்டேன் என்று சொல்கிறவர்கள், ஆவியானவரின் கனியாகிய தயவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோமா?
நாம் இந்த உலகில் வாழ்வதற்கு மற்றவர்களின் தயவு நமக்கு தேவையாயிருக்கிறது. குழந்தைகளாயிருந்தபோது
பெற்றோரின் தயவு, பெரியவர்களானதும் வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் தயவு, வயதானவுடன்
பிள்ளைகளின் தயவு என்று தயவு இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை. நாம் மற்றவர்களின் தயவை
பெறும்போது, நாமும் தயவு காண்பிக்க வேண்டுமே!
.
'ஒருவருக்கொருவர்
தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல,
நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்' (எபே-4:32) என்ற வசனத்தின்படி ஒருவருக்கொருவர் தயவாயிருப்போம்.
நம்மிடம் தயவு கேட்டுவரும் ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்வோம். கர்த்தர் சீக்கிரம்
வருகிறார். ஆமென் அல்லேலூயா!
ஜெபம்
எங்கள்மேல்
தயவும் இரக்கமும் உள்ள நல்ல தகப்பனே, புதிய மாதத்தில் நாங்கள் காணும்படி நீர் பாராட்டின
எல்லா கிருபைகளுக்காகவும் உமக்கு ஸ்தோத்திரம். எங்களுக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல்,
தயவையும் எனக்குப் பாராட்டினீரே உமக்கு ஸ்தோத்திரம். நாங்களும் மற்றவர்களுக்கு தயவு
பாராட்டும்படி, எங்களிடத்தில் வரும் உதவியற்றவர்களுக்கு எங்களால் இயன்ற தயவை காண்பிக்கும்படி
கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment